`இந்தியா வலுவான அணிதான், ஆனால்…- ஸ்கெட்ச் போடும் வங்கதேசம்

by Rahini A, Mar 13, 2018, 10:09 AM IST

இந்தியா- வங்கதேசம்- இலங்கை விளையாடும் முத்தரப்புத் டி20 தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமுள்ளதால், பரபரப்புத் தொற்றிக் கொண்டுள்ளது.

இந்திய அணிக்கு எதிராக வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் முஷ்ஃபிகிர் ரஹிம், தான் வகுத்துள்ள வியூகம் குறித்துப் பேசியுள்ளார். முத்தரப்புத் தொடரில் இதுவரை 4 போட்டிகள் முடி௶டைந்துள்ளன. இதுவரை இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

இன்னும் இரண்டே போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், எந்த இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக தான் விளையாடிய முதல் போட்டியில் வங்கதேசம் தோல்வியடைந்தது. ஆனால், அடுத்தாக இலங்கைக்கு எதிராக விளையாடிய போட்டியில் 215 ரன்களை சேஸ் செய்து மாஸ் கம்-பேக் கொடுத்தது.

எனவே, அடுத்தப் போட்டியிலும் வங்கதேசம் வெற்றி பெறும் உற்சாகத்துடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து பேசிய முஷ்ஃபிகிர் ரஹிம், `இந்தியா ஒரு வலுவான அணி. அவர்களை வெல்வது சுலபம் இல்லை. ஆனால், அது முடியாத காரியம் இல்லை. அவர்களுக்கு எதிராக நன்றாக பந்து வீசினால், கண்டிப்பாக வெற்றி நிச்சயம்' என்று நம்பிக்கைத் ததும்பப் பேசியுள்ளார். 

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading `இந்தியா வலுவான அணிதான், ஆனால்…- ஸ்கெட்ச் போடும் வங்கதேசம் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை