வீரர்களை தொடர்ந்து கண்காணிப்பில் இருத்தி வைப்பதற்காக, இலங்கை கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு ஜிபிஎஸ் கருவியை பொருத்துகிறது.
கடந்த ஆண்டு இலங்கை அணி பல கிரிக்கெட் தொடர்களில் தோல்வியுற்று அடிமேல் அடிவாங்கியது. இதனால் முக்கியமான தொடர்களில் வெற்றியை குவிக்க முடியாமல் இலங்கை அணி தரவரிசையில் பெரும் பின்னடைவை சந்தித்தது.
இதற்கு காரணம் வீரர்களுக்கு இருக்கும் கொழுப்பின் அளவு மற்றும் காயம் ஆகியவற்றின் மூலம் இலங்கை அணி வீரர்கள் சரிவர விளையாட முடியாமல் திணறினர்.
வரும் காலங்களில் இலங்கை அணியை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்து செல்வதற்கும், 2019-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடருக்கு தயாராகுவதற்காக வீரர்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொறுத்தப் போவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த அதிநவீன தொழில் நுட்பத்தை உடைய ஒரு ஜிபிஎஸ் கருவியின் விலை (ஒரு வீரருக்கு மட்டும்) 48 லட்சம் ஆகும். இந்த ஜிபிஎஸ் சிறிய கருவியின் மூலம் வீரர்களின் காயம், சக்தி, போட்டியின் போது செயல்படும் விதம் ஆகியவற்றை விளையாடும் போதே அறிய முடியும்.
உலகின் முன்னணி கால்பந்து அணியான பார்சிலோனா அணி வீரர்களுக்கு இந்த ஜிபிஎஸ் கருவி மூலம் வீரர்களின் உடல் சக்தி, செயல்பாடுகளை ஆராய்ந்த பின்னேர போட்டியில் களமிறக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.