ஐபிஎல் போட்டி நடைபெறுவதில் சிக்கல்? - 9 மாநிலங்கள் விளக்கம் அளிக்க உத்தரவு

பணம் கொழிக்கும் ஐபிஎல் போட்டிகளில் வெகுவாரியான குடிநீர் வீணடிக்கப்படுவதாக கூறி வழக்குத் தொடர்ந்துள்ளதை அடுத்து இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Mar 16, 2018, 19:58 PM IST

பணம் கொழிக்கும் ஐபிஎல் போட்டிகளில் வெகுவாரியான குடிநீர் வீணடிக்கப்படுவதாக கூறி வழக்குத் தொடர்ந்துள்ளதை அடுத்து இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த ஹைதர் அலி என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “பணம் கொழிக்கும் ஐபிஎல் தொடருக்காக மைதான பராமரிப்பு வேலைகளுக்காகப் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணடிக்கப்படுகின்றது.

மைதானத்தில் இப்படி தண்ணீர் வீணடிக்கப்படுவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, நிலத்தடி நீர் மட்டமும் குறையும்.கோடைக் காலம் தொடங்கி விட்டதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே வணிக ரீதியாக நடைபெறும் இந்தப் போட்டியை நடத்த அரசு தடைவிதிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரை விசாரித்த நீதிபதி ஜாவட் ரஹீம் தலைமையிலான அமர்வு, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், பிசிசிஐ மற்றும் போட்டியை நடத்தும் 9 மாநிலங்கள் இதுகுறித்து சரியான விளக்கத்தை 2 வாரங்களுக்குள் எழுத்துப் பூர்வமாக அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 11-வது சீசன் துவக்க விழா ஏப்ரல் 7-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்ள இருக்கிறது.

ஆனால், போட்டி நடைபெறும் தருணத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் திடீரென தடை விதித்தால் என்ன செய்வது என்ற கலக்கத்தில் பிசிசிஐ உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

You'r reading ஐபிஎல் போட்டி நடைபெறுவதில் சிக்கல்? - 9 மாநிலங்கள் விளக்கம் அளிக்க உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை