தனது முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள தீவிர பயிற்சியில் இறங்கியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டாலும், அது அணியை பாதிக்காது, அணியின் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் என்று அணி நிர்வாகம் நம்பிக்கையை பாய்ச்சி வருகிறது.
இதற்கிடையே, நடப்பு தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி உள்ள ரெய்னா சென்னை அணியில் டாப் ஆர்டரில் களமிறங்கி வந்தார். இப்போது அவர் இல்லை என்பதால் அந்த இடத்தில் யார் களமிறங்குவது என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
தற்போது அந்த இடத்துக்கு இந்திய வீரர் ஒருவர் விளையாடினால் சரியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் சென்னை அணியின் முன்னாள் வீரரும், நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டருமான ஸ்காட் ஸ்டைரிஸ். அவர் கூறுகையில், ``ரெய்னா இடத்தில் அம்பாதி ராயுடுவை விளையாட செய்வது தான் சரியாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
ரெய்னா இல்லாதது சென்னை அணிக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும். என்றாலும், ரெய்னாவை போலவே மூன்றாவது இடத்தில் இறங்கி விளையாடிய அனுபவம் ராயுடுவுக்கு இருக்கிறது. 2018 ல் ராயுடு சென்னை அணிக்காக ஆடியதே அதற்கு எடுத்துக்காட்டு" என்றும் கூறியுள்ளார்.