ஐபிஎல் லீக் சுற்றின் எட்டாவது போட்டியானது அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.இரு அணிகளுமே தலா ஒரு போட்டியில் விளையாடி தோல்வியைத் தழுவியுள்ளது. எனவே முதல் வெற்றியைப் பதிவு செய்ய, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள இந்த இரு அணிகளுமே போராடும்.
KKR vs SRH opening pair
கொல்கத்தா அணியின் தொடக்க இணையாக சுனில் நரேன் மற்றும் ஷீப்மான் கில் களமிறங்க வாய்ப்புண்டு. சுனில் நரேன் கடந்த 2018 முதல் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி வருகிறார். ஆனால் அவரால் சிறப்பான ஒரு இன்னிங்ஸை பேட்டிங்கில் தர இயலவில்லை. கில்லை பொறுத்தவரை ஒரு பெரிய இன்னிங்ஸை அடிக்க வாய்ப்புண்டு. ஆனால் நரேனுக்கு பதிலாக நிகில் நாயக்கை முயற்சி செய்து பார்க்கலாம்.
ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரைத் தொடக்க இணையான பேர்ஸ்டோ மற்றும் வார்னர் இருவரும் சிறப்பான தொடக்கத்தைத் தர வாய்ப்புள்ளது. வார்னர் பவர்பிளே ஓவரில் வேகப்பந்தில் அவுட் ஆக வாய்ப்புண்டு. ஆனால் அந்த அளவிற்கு நேர்த்தியான பந்து வீச்சைக் கொல்கத்தா வீசினால் , ஹைதராபாத் அணியின் ஸ்கோரை கட்டுக்குள் வைக்கலாம்.
KKR vs SRH Middle orders
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரைச் சிறப்பான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது. இந்த முறை இரண்டாவதாக மோர்கனை முயற்சிக்கலாம். தினேஷ் கார்த்திக் மற்றும் ரானா இருவரும் அடுத்தடுத்த இடங்களில் இறங்கலாம்.
ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரைக் கடந்த போட்டியில் தோல்வி அடைந்ததற்குக் காரணம் மிடில் ஆர்டர்களின் சொதப்பலான ஆட்டம் தான். எனவே மனிஷ் பாண்டே , பிரியம் கார்க் போன்றோர் இன்று சிறப்பாகச் செயல்பட்டால் வெற்றி பெறலாம்.
KKR vs SRH All Rounder
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை ஆல்ரவுண்டர் இடத்தை ஆன்ட்ரு ரஸுலை மட்டுமே நம்பியுள்ளது. ஒருவேளை நிகில் நாயக்கிற்கு பதில் திரிபாதி சேர்க்கப்பட்டால் , ரஸுலுடன் கைகோர்த்து அணிக்கான பலத்தைச் சேர்க்கலாம்.
ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை முஹமது நபி இன்று சேர்க்கப்பட வாய்ப்புண்டு. இவரும் இணைந்தால் அபிஷேக் ஷர்மா மற்றும் விஜய் சங்கருடன் இணைந்து எதிரணியை கட்டுப்படுத்தலாம்.
SRH vs KKR BOWLING
கொல்கத்தா அணியில் பாட் கம்மின்ஸ் மற்றும் ஷிவம் மாவி இருவரும் வேகப்பந்து வீச்சில் பவர்பிளேயில் விக்கெட்டை வீழ்த்தினால் ஹைதராபாத் அணிக்கு அழுத்தத்தைக் கொடுக்கலாம். சுழல் பந்துவீச்சைப் பொறுத்தவரை குல்தீப் யாதவை சரியான இடத்தில் பயன்படுத்தினால் விக்கெட் எடுக்க வாய்ப்புண்டு.
ஹைதராபாத் அணியை பொறுத்தவரை யார்க்கர் மன்னன் நடராஜன் , ஸ்விங் பவுலர் புவனேஸ்வர் குமார் மற்றும் சந்தீப் சர்மா போன்றோர் மிரட்ட வாய்ப்புண்டு.
சுழல் பந்து வீச்சைப் பொறுத்தவரை ரஷீத் கான் மற்றும் அபிஷேக் ஷர்மா மிரட்டுவார்கள்.
ரஷீத் கான் vs ஆன்ட்ரூ ரஸுல்
கொல்கத்தா ரஸுலை முந்தன வரிசையில் இறக்கினால் , ஹைதராபாத் அணி கண்டிப்பாக ரஷீத் கானை பந்து வீசப் பணிக்கலாம். ரஷீத் ஓவரில் இதுவரை 3 முறை அவுட் ஆகியுள்ளார் ரஸுல் .
ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியை விட நேர்த்தியான பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டரை பெற்றுள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.