ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் அஜின்கியே ரஹானே கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா விளையாடிய டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர்கள், பந்தை விதிகளுக்குப் புறம்பாக சேதப்படுத்தியது தெரியவந்துள்ளது.
இது கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், அந்த அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் தாங்கள் வகித்து வந்த பதவிகளில் இருந்து தூக்கியெறியப்பட்டு உள்ளனர். மேலும், ஸ்மித் மற்றும் வார்னரின் செயல் மீது விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் தொடருக்கு கம்-பேக் கொடுக்கிறது. அதற்கு ஸ்டீவ் ஸ்மித்தான் தலைமை பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஸ்மித் தற்போது பெறும் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் அவரை நீக்கிவிட்டு ரஹானேவை கேப்டனாக நியமிப்பதாக, அந்த அணி நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.