ஐபிஎல் போட்டிகளுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி செல்கிறது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். டி 20 அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா செல்ல உள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளிலும், தலா 3 ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளிலும் விளையாடுகிறது.இந்தப் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தான் இந்திய அணியில் புதுமுக வீரராக இடம்பெற்றுள்ளார். இது தவிரத் தமிழ்நாட்டைச் சேர்ந்த இன்னொரு சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தரும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் இம்முறையும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். ரிஷப் பந்துக்கு ஒரு நாள் மற்றும் டி20 அணிகளில் இடம் கிடைக்கவில்லை. ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடி வரும் மாயங்க் அகர்வால் 3 அணியிலும் இடம் பிடித்துள்ளார். ஷுப்மான் கில்லுக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது.
டி 20 அணி: விராட் கோஹ்லி (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், மாயங்க் அகர்வால், ஸ்ரேயஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முஹம்மத் ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், வருன் சக்ரவர்த்தி.
ஒருநாள் அணி: விராட் கோஹ்லி (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், ஷுப்மான் கில், மாயங்க் அகர்வால், ஸ்ரேயஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் செய்னி, ஷார்துல் தாகூர்.
டெஸ்ட் அணி: விராட் கோஹ்லி (கேப்டன்) அஜிங்கியா ரஹானே (துணை கேப்டன்), மாயங்க் அகர்வால், பிரித்வி ஷா, கே.எல். ராகுல், சேதேஷ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் செய்னி, ரவீந்திர ஜடேஜா, ஆர். அஸ்வின், முகம்மது சிராஜ்.