டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்படுகிறது. இதனால், விராட்டின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
டெல்லியில் மேடம் துசாட்ஸ் என்ற பிரபல அருங்காட்சியகம் உள்ளது. இங்கு, உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களின் முழு உருவ மெழுகுச் சிலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசியல், பொதுச்சேவையில் ஈடுபட்டுள்ள பிரபலங்கள் உள்பட கிரிக்கெட் வீரர் சச்சின், கபில் தேவ், கால்பந்து வீரர் ரொனால்டோ ஆகியோரின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இவர்களது வரிசையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் மெழுகு சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, விராட் கோலியின் உடல் அளவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த தகவலால், விராட் கோலியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, விராட் கோலி கூறுகையில், “மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச்சிலை வைக்க இருப்பது எனக்கு கிடைக்கும் மிகப்பெரிய கவுரவம். இத்தகைய வாழ்நாள் நினைவுச்சின்னம் வழங்கிய மேடம் துசாட்ஸ் குழுவிற்கு நன்றி ” என தெரிவித்தார்.