சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிக்கு 20 ஆண்டுகள் தடை!

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டதை அடுத்து, ஜிம்பாப்வே கிரிக்கெட் சங்க நிர்வாகிக்கு 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Mar 28, 2018, 22:11 PM IST

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டதை அடுத்து, ஜிம்பாப்வே கிரிக்கெட் சங்க நிர்வாகிக்கு 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டன் கிரிமரிடம் கடந்த ஆண்டு ஹராரே கிரிக்கெட் சங்க உறுப்பினர் ராஜன் நாயர் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து பேசியுள்ளார்.

ராஜன் நாயர் என்பவர் ஜிம்பாப்வேயின் ஹராரே மாநகர் கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளர் மற்றும் மார்க்கெட்டிங் இயக்குநராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது அந்நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன் கிரிமரை சூதாட்டத்திற்கு அழைத்தது உள்ளிட்ட 3 வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டன் கிரிமர் ஐசிசியில் ராஜன் நாயர் தன்னை சூதாட்டத்தில் ஈடுபட வற்புறுத்தியதாக புகார் அளித்தார். ராஜன் நாயரும் இந்த புகாரை ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து கிரிமர் சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் (ஐ.சி.சி.) புகார் தெரிவித்தார்.

புகாரின் அடிப்படையில் ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை மேற்கொண்டது.விசாரணையின் முடிவில், சூதாட்டத்துக்காக கிரிமருடன் தொடர்பு கொண்டதை ராஜன் நாயர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்க ராஜன் நாயருக்கு 20 ஆண்டுகள் தடை விதித்து ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிக்கு 20 ஆண்டுகள் தடை! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை