அளவுக்கு அதிகமாக தங்கம்... தடுத்து நிறுத்தப்பட்ட குர்னால் பாண்டியா!

krunal pandya stopped in mumbai airport by officials

by Sasitharan, Nov 12, 2020, 20:53 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர் குர்னால் பாண்டியா. இவர் தனது சகோதரர் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஓரளவுக்கு ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்னால் இறுதிப்போட்டியில் வின்னிங் ஷாட் அடித்து அணியை வெற்றிபெறசெய்தார். இதற்கிடையே, ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் குர்னால் இடம்பெறாததால் துபாயில் இருந்து மும்பை திரும்பி இருக்கிறார்.

மும்பை விமானத்தில் வந்திறங்கிய அவரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஏன் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்தன. தற்போது அந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ``அளவுக்கு அதிகமாக தங்க நகைகள் மற்றும் விலைமதிப்பு மிக்க பொருட்கள் நிறைய வைத்திருந்தார் என்பதால் தடுத்து நிறுத்தப்பட்டார்' என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது சட்டவிரோதமா, இதன்பின் அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதா என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

More Cricket News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை