60 ரன்னில் சுருண்ட விண்டீஸ் - 143 ரன்கள் வித்தியாசத்தில் பாக். அபார வெற்றி

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Apr 2, 2018, 14:59 PM IST

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி கராச்சியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.

அதிகப்பட்சமாக ஹுசைன் தலத் 41 ரன்களும், ஃபஹர் ஜமான் 39 ரன்களும், சர்ஃப்ராஸ் அஹமது 38 ரன்களும், சோயப் மாலில் 37 ரன்களும் எடுத்தனர்.

பின்னர், 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். அந்த அணியினர் 13.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

அந்த அணியில் அதிகப்பட்சமாக சாமுவேல்ஸ் 18 ரன்கள் எடுத்தார். 4 பேர் டக்-அவுட் ஆகினர். மூன்று பேர் மட்டுமே இரட்டை இலக்கத்தை தாண்டினர். இதனால், 143 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

டி20 கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது வெற்றி இதுதான். முன்னதாக, கென்யா அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading 60 ரன்னில் சுருண்ட விண்டீஸ் - 143 ரன்கள் வித்தியாசத்தில் பாக். அபார வெற்றி Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை