இந்தியாவை புரட்டி எடுத்த ஆஸ்திரேலியா அணி! 66 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா!

Advertisement

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு பங்கேற்கும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும். சிட்னியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த தொடருக்கு முன்னரே போட்டியின் மீதான எதிர்பார்ப்பு எகிரத்தொடங்கியது. ஏனெனில் கடந்த 2018 ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்தது. ஆனால் இந்த தொடரில் பந்தை சேதப்படுத்திய காரணத்தால் ஸ்மித் மற்றும் வார்னர் இருவரும் அணியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த தொடரில் இருவரும் இடமுபிடித்ததால் தொடரின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. மேலும் தொடரும் முன்னரே இரு அணியின் வீரர்களும் பல விவாதத்துக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கது.

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆரோன் பின்ச் மற்றும் வார்னர் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய பந்து வீச்சாளர்கள் இந்த விக்கெட்டை பிரிக்க முடியாமல் திணறினர். நிதானமாக ஆடிய வார்னர் 28 வது ஓவரை வீசிய ஷமி பந்தில் 69 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால் மறுபுறமு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்த கேப்டன் பின்ச் உடன் ஸ்மித் கைகோர்த்தார்‌. இருவரும் அணியின் ரன்ரேட்டை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர். கேப்டன் பின்ச் (114) அதிரடியாக விளையாடி தனது சதத்தை பதிவு செய்தார். மறுபுறம் பந்து வீச்சாளர்களை புரட்டி எடுத்துக்கொண்டிருந்த ஸ்மித்தும் (105) தனது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். ஒருவழியாக ஷமி 3 விக்கெட், பும்ரா, சஹல் மற்றும் சைனி தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும். ஆஸ்திரேலிய அணியின் ரன்ரேட் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஐக்கிய அரபு எமிரகத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல், அந்த தொடரில் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. இதனை வெகுவாக சாடினார் முன்னாள் வீரர் சேவாக். ஆனால் இதற்கு பதிலடி தரும் வகையில் 19 பந்தில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களை நொறுக்கி 45 ரன்களை விளாசினார்‌. ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்களை விளாசி அசத்தியது. 375 ரன்கள் என்ற பெரிய இலக்கை கொண்டு களமிறங்கியது இந்திய அணி. ரோகித் சர்மா காயத்தால் இந்த தொடரில் இருந்து விலகியதால் தொடக்க ஆட்டக்காரராக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டார். தவான் மற்றும் அகர்வால் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினாலும், மய்ங்க்(22) விக்கெட்டை வீழ்த்தி ஹேசல்வுட் அசத்தினார். இந்திய அணியின் நம்பிக்கை மொத்தம் கேப்டன் கோலியின் மீது திரும்பியது.

கோலி சேசிங் கிங் என்பதாலும், கடந்த ஐபிஎல் போட்டியில் இவர் பெரிதாக சோபிக்காததாலும் இந்த போட்டியில் இவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் கோலி தனது வழக்கத்துக்கு மாறான ஆட்டபாணியை ஆடினார். நிதானமாக ஆடும் கோலி இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாட தொடங்கினார். இதன் விளைவு வந்தவுடனே கம்மின்ஸ் ஓவரில் கோலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை சாம்பா கோட்டை விட இந்திய ரசிகர்கள் பெரு மூச்சு விட்டனர்‌. இருப்பினும் இது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை 10 வது ஓவரை வீசிய ஹேல்வுட் ஓவரில் பின்ச்சிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் கோலி(21). பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் (2) மற்றும் ராகுல்(12) ரன்களில் வெளியேற இந்திய அணியின் தோல்வி உறுதியானது. ஆனால் ஒருபுறம் நிலைத்து ஆடிய தவான் உடன் ஹர்திக் பாண்டியா கைகோர்க்க இருவரும் அணியின் ரன்னை உயர்த்தினர்.

ஐந்தாவது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 128 ரன்களை விளாசி அசத்தியது. ஒருகட்டத்தில் இந்த இணை வெற்றியை தேடி தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 74 ரன்களில் சாம்பா ஓவரில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார் தவான். மறுபுறம் அதிரடியாக ஆடி கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா (90), சாம்பா ஓவரில் அவுட்டாகி வெளியேற, தோனி இருந்திருந்தா வெற்றி பெற்று இருக்கலாம் என்ற நிலையில் இந்திய ரசிகர்களின் புலம்பல் இருந்தது. ஆஸ்திரேலியா அணியின் சூழற்பந்து வீச்சாளரான ஆடம் சாம்பா சுழலில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஹேசல்வட் 3 விக்கெட் மற்றும் ஸ்டார்க் 1 ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை 308/8 ரன்களில் சுருட்டினர். அதிரடியாக ஆடி அணியின் ரன்ரேட்டை உயர்த்திய ஸ்மித் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Advertisement
மேலும் செய்திகள்
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
adam-zampa-talk-about-ipl
ஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா
brett-lee-donates-1-bitcoin-for-oxygen-supplies-for-india
`பேட் கம்மின்ஸ் இன்ஸ்பிரேஷன்... 40 லட்சம் நிதியுதவி அறிவித்த பிரட் லீ!
bcci-clarifies-players-fear
கவலை கொள்ள வேண்டாம்!.. வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த உத்தரவாதம்
cricket-player-natrajan-surgery
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு காலில் ஆபரேஷன்.. என்ன ஆச்சு??

READ MORE ABOUT :

/body>