`கிரிக்கெட் கலாசாரத்தை மாற்றுங்கள்!- யூ-டர்ன் ஆடிக்கும் ஆஸி., கிரிக்கெட்

by Rahini A, Apr 7, 2018, 13:45 PM IST

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும், கிரிக்கெட் வாரியம் மத்தியிலும் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், `இனி பழைய துடுக்குத்தனமான வழிமுறை வேலைக்காகாது. கிரிக்கெட் கலாசார்த்தில் மாற்றம் வேண்டும்’ என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சேர்மேன் டேவிட் பீவர் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் பேங்க்ராஃப்ட், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் விதிகளுக்கு புறம்பாக பந்தை சேதப்படுத்தினர். இது கிரிக்கெட் உலகில் பெறும் அதிர்ச்சியைக் கிளப்பிய நிலையில், மூவரும் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து குறுகிய காலத்துக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இதையடுத்து அந்த அணியின் பயிற்சியாளரான டேரன் லீமேனும் பதவி விலகுவதாக தெரிவித்துவிட்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தானாக முன் வந்து, `நமது கிரிக்கெட் கலாசாரத்தில் மாற்றம் வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சேர்மேன் டேவிட் பீவர் தெரிவிக்கையில், `நடந்த சம்பவங்களுக்கு பிறகு, ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் கௌரவத்தை மீட்டெடுப்பதற்கு, தற்போது நிலவும் கலாசாரம் மாற்றப்பட வேண்டும்.

எனவே, ஒட்டுமொத்தமாக இதுவரை பின்பற்றி வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் நிர்வாகம், பண்பாடு ஆகியவற்றை மீளாய்வு செய்ய வலியுறுத்தியுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading `கிரிக்கெட் கலாசாரத்தை மாற்றுங்கள்!- யூ-டர்ன் ஆடிக்கும் ஆஸி., கிரிக்கெட் Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை