டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இடது கை ஆட்டக்காரர்களை வீழ்த்திய முத்தையா முரளிதரனின் சாதனையை இந்திய பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்த இந்திய அணி, 2-வது டெஸ்ட் போட்டில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமன் செய்தது.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுடனான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய சூழல் பந்து வீச்சாளார் ரவிச்சந்திரன் அஸ்வின் முத்தையா முரளிதரனின் சாதனையையும் முறியடித்துள்ளார். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 2 டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்சில் ஜோஷ் ஹேசில்வுட்டை விக்கெட் எடுத்தன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இடது கை ஆட்டக்காரர்களை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.
இதுவரை, டெஸ்ட் போட்டிகளில் அதிகப்படியாக 191 இடது கை ஆட்டக்காரர்களை விக்கெட் எடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சூழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் சாதனை படைத்திருந்தார். ஆனால், ரவிச்சந்திரன் அஸ்வின் 192 இடது கை ஆட்டக்காரர்களை விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்த வரிசையில், ஜேம்ஸ் ஆண்டர்சன் (186), கிளென் மெக்ராத் (172), ஷேன் வார்னே (172) மற்றும் அனில் கும்ப்ளே (167) ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.