இளைஞர்களை வழிநடத்துவதில் டிராவிட் சிறந்தவர்.. ஹனுமா விஹாரி புகழாரம்!

by Sasitharan, Jan 22, 2021, 18:30 PM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டி முடிவடைந்தபின் ராகுல் டிராவிட் தனக்கு மெசேஜ் செய்ததாக இந்திய இளம் கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று வரலாற்று சாதனையை படைத்தது. இதற்கிடையே, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மிக குறைந்த ரன்கள் எடுத்து படுதோல்வியை சந்தித்தது. இந்தியாவின் இந்த தோல்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால், ஆஸ்திரேலியா சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் காயத்துடன் விளையாடிய ஹனுமா விஹாரி, அஸ்வினுடன் இணைந்து திறமையாக விளையாடி 3-வது டெஸ்ட் போட்டியை டிரா செய்து முடித்து வைத்தனர்.

இந்நிலையில், டெஸ்ட் போட்டி குறித்து பல்வேறு தகவல்களை இளம் கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி பகிர்ந்துள்ளார். குறிப்பாக, சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி குறித்து தெரிவித்துள்ளார். சிட்னி டெஸ்ட் போட்டி முடிவடைந்ததும் இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டனும் தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவருமான ராகுல் டிராவிட் தனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதில், மிகவும் சிறப்பாக விளையாடினாய் விஹாரி, நல்லதொரு ஆட்டத்தை ஆடினாய் என்று பதிவிட்டிருந்தார். இந்த உள்ளம்தான் அவரின் சிறப்பு அவர் எப்போதும் என் மதிப்புக்குரியவர் என்று விஹாரி தெரிவித்தார்.

மேலும் விஹாரி கூறுகையில், இந்திய ஏ அணிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, சிராஜ்.சைனி, சுப்மன், மயாங்க் ஆகியோர் அணியில் இருந்தனர். ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்த காரணத்தினால் தான் இந்திய ஏ அணி அதிகமான சுற்றுப் பயணங்களுக்கு சென்று விளையாடியது. எப்போதும் இளைஞர்களை வழிநடத்துவதில் ராகுல் டிராவிட் மிகச்சிறந்தவர். எங்களுக்கு எப்போதெல்லாம் வழிக்காட்டுதல் தேவைப்பட்டதோ அப்போதெல்லாம் ராகுல் டிராவிட் எங்களுடன் இருப்பார் என்றும் ஹனுமா விஹாரி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

You'r reading இளைஞர்களை வழிநடத்துவதில் டிராவிட் சிறந்தவர்.. ஹனுமா விஹாரி புகழாரம்! Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை