இந்திய அணியுடன் தோல்வியடைந்த போதிலும் என்னுடைய மகள் அதற்காக வருத்தப்படவில்லை. அவள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறாள் என்று கூறுகிறார் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர்.
இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததை அந்நாட்டு ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கேப்டன் டிம் பெய்னை நீக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு ஆஸ்திரேலியாவில் ஒருவர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் என்று கூறுகிறார் ஆஸ்திரேலியாவில் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். அவர் வேறு யாரும் இல்லை, என்னுடைய மகள் தான் என்கிறார் இவர். டேவிட் வார்னரின் மகள் இன்டி இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகை ஆவார். குறிப்பாக கேப்டன் விராட் கோஹ்லியை அவருக்கு ரொம்ப பிடிக்கும்.
இதுகுறித்து வார்னர் கூறியது: டெஸ்ட் தொடரில் இந்தியாவுடன் ஆஸ்திரேலியா தோற்றுவிட்ட போதிலும் என்னுடைய மகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாள். நாங்கள் தோற்று விட்டோம் என்று அவளுக்கு தெரியும். ஆனால் அவள் மகிழ்ச்சியுடன் இருக்கிறாள். இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அது கோஹ்லிக்கும் நன்றாகவே தெரியும். அதனால் தான் அவர் என்னுடைய மகளுக்கு தன்னுடைய ஜெர்சியை பரிசாக கொடுத்தார். இதற்காக நான் கோவிலுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். கோஹ்லியின் ஜெர்சியை தன்னுடைய மகள் அணிந்துள்ள புகைப்படத்தை வார்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.