ரகானே என்ற பேட்ஸ்மேன் தான் பிரச்சனை... சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் குட்டு

by Nishanth, Feb 10, 2021, 18:31 PM IST

சென்னை டெஸ்டில் மோசமாக ஆடிய ரகானேவை நோக்கி விமர்சனக் கணைகள் வரத் தொடங்கி விட்டன. ரகானே என்ற பேட்ஸ்மேன் தான் பிரச்சினை என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.ஆஸ்திரேலிய தொடர் முடிந்த போது இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரகானே புகழின் உச்சிக்குச் சென்றார். அவரை கிரிக்கெட் ரசிகர்கள் தோள் மேல் ஏற்றிப் பாராட்டினர். மெல்பர்ன் டெஸ்டில் செஞ்சுரி அடித்து, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரையும் வென்ற ரகானேவின் நிலைமை இப்போது மோசமாகி விட்டது.

ஆஸ்திரேலியாவில் ஒரு சதம் அடித்த பின்னர் 27 (ஆட்டமிழக்காமல்), 22, 4, 37, 24, 1,0 இது தான் அடுத்தடுத்த போட்டிகளில் ரகானே எடுத்த ரன்களாகும். அதிலும் குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிராகச் சென்னை டெஸ்ட் போட்டியில் இவர் எடுத்த அதிகபட்ச ரன்கள் 1. முதல் இன்னிங்சில் 1 ரன்னும், 2வது இன்னிங்சில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்.இதனால் ரகானேவை பலரும் இப்போது குறை கூறத் தொடங்கி விட்டனர். ஆனால் ரகானேவை விட்டுக் கொடுக்க கேப்டன் விராட் கோஹ்லி தயாராக இல்லை.

ரகானே இந்திய அணியின் முக்கியமான வீரர் என்றும், அவர் கண்டிப்பாக மீண்டும் சிறப்பாக ஆடுவார் என்றும் கோஹ்லி நேற்று கூறினார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியது: ரகானே ஒரு சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கேப்டனை விட பேட்ஸ்மேன் ரகானே தான் எனக்குப் பிரச்சினையாக உள்ளார். ஒரு சதம் அடித்த பின்னர் சிறந்த வீரர்கள் அவர்களுடைய 'பார்மை' தக்கவைத்து 'பார்மி'ல் இல்லாதவர்களின் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரகானே தொடர்ந்து பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்து வருகிறார் என்று மஞ்ச்ரேக்கர் கூறினார்.

You'r reading ரகானே என்ற பேட்ஸ்மேன் தான் பிரச்சனை... சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் குட்டு Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை