டாஸ் போட்டதும் காயினை காணவில்லை – ஏன் அப்படி செய்தார் சஞ்சு சாம்சன்?!

by Madhavan, Apr 14, 2021, 20:55 PM IST

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போட்ட ராஜஸ்தான் அணி கேப்டன் காயினை எடுத்து வைத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல் 2021 தொடரில் ராஜஸ்தான்- பஞ்சாப் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனியாளாக சதம் விளாசி கடைசி வரை வெற்றிக்காக போராடினார். ஆனால் கடைசி பந்தில் அவர் தூக்கி அடித்த பந்து பவுண்ரி எல்லையில் கேட்ச் ஆனதால் அவரது கனவு தகர்ந்தது. இருந்தாலும் சஞ்சு சாம்சனின் பேட்டிங்கை பலரும் புகழ்ந்து தள்ளிவிட்டனர்.

இதனிடையே இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் டாஸின் போது ருசிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக டாஸ் போட்ட சஞ்சு சாம்சன் உடனடியாக அந்த காயினை எடுத்து தனது தனது பாக்கெட்க்குள் வைத்து கொண்டார். ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் கேப்டனாக ராஜஸ்தானை வழிநடத்தும் முதல் போட்டி என்பதால், இந்தப் போட்டியின் நினைவாக அவர் இவ்வாறு செய்துள்ளார். நினைவுசின்னமாக காயினை சஞ்சு எடுத்துக் கொண்டார். இதை சற்றும் எதிர்பாராத நடுவர் சற்று குழப்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.சஞ்சு சாம்சனின் கேப்டன்சி பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. கடினமான இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் அணியில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 119 ரன்கள் அடித்தார். கடைசி பந்தில் அவர் பவுண்டரி எல்லைக்கு தூக்கி அடிக்கப்பட்ட பந்து கேட்ச் பிடிக்கப்பட்டதால் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

You'r reading டாஸ் போட்டதும் காயினை காணவில்லை – ஏன் அப்படி செய்தார் சஞ்சு சாம்சன்?! Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை