கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாளில் அவரை அவமதிக்கும் வகையில் ஆஸ்திரேலியக் கிரிக்கெட் வாரியம் செயல்பட்டுள்ளது.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், கிரிக்கெட் கடவுள், கிரிக்கெட் பிதாமகன் என உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இன்று சச்சின் தனது 45வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நாளை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு அவமரியாதையான செயலை அரங்கேற்றியுள்ளது. சச்சின் இந்தியாவின் சிறந்த வீரர் என்று மட்டும் அடங்கிவிடாமல் சர்வதேச அளவில் பிராட்மேனுக்கு நிகராக கருதப்பட்டு மதிக்கப்படுபவர்.
ஆனால், ஆஸ்திரேலியக் கிரிக்கெட் வாரியம் இன்று தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் ஆஸ்திரேலிய வீரர் டாமின் ஃப்ளம்மிங்-கின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. அந்த வாழ்த்து தான் ஆஸ்திரேலியக் கிரிக்கெட் வாரியத்தின் தரம் தாழ்ந்த மனப்பான்மையை வெளிக்காட்டியுள்ளது.
டாமின் ஃப்ளம்மிங் முன்னொரு போட்டியின் சச்சினை பெளல்ட் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இதுதான் ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது. குறிப்பாக சச்சின் பிறந்தநாளில் ஃப்ளம்மிங்-க்கு வாழ்த்து சொல்லும் சாக்கில் சச்சினை அவமரியாதை செய்துள்ளதாக சர்வதேச ரசிகர்கள் ஆஸ்திரேலியாவை அளவுக்கதிகமாக தாக்கி வருகின்றனர்.