ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 15-லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது. நேற்றைய ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் 2021 தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளது எனப் பாப்போம்.
சென்னை சூப்பர் தற்போது நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது. சி.எஸ்.கே +1.142 ரன்-ரேட்டுடன் ஆறு புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இதுவரை ஆடிய ஆட்டங்களில் தோல்வி அடையாத ஒரே அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதன் ரன்-ரேட் +0.750 மற்றும் ஆறு புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த இரண்டு அணிகளும் ஆறு புள்ளிகளை பெற்றிருந்தாலும், ரன்-ரெட் அடிப்படையில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
டெல்லி கேப்பிடல் அணியும் ஆறு புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆனால் அந்த அணியின் ரன்-ரேட் +0.426 என்பதால் மூன்றாவது இடத்தில் உள்ளன.
நடப்பு சாம்பியன்கள் மும்பை அணி 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
புதன்கிழமை நடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி புள்ளிகள் அட்டவணையில் தங்கள் கணக்கைத் திறந்தது. அவர்கள் இப்போது ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் புள்ளிகள் அட்டவணையில் ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளன.