ஐபிஎல் தற்போதைய நிலவரம் மும்பை, பஞ்சாப், டெல்லி - எக்ஸ்ரே பார்வை

ஐபிஎல் திருவிழா ஆரம்பிக்கும் முன் வரை, பஞ்சாப்பிற்கு அடுத்த சிறந்த அணியாக வலம் வரும் என பலரால் எதிர்பாக்கப்பட்ட ஒன்று 'மும்பை அணி'.. ஆனால் நடந்ததோ வேறு.

பிரியங்கா சோப்ராவுடன் எல்லா அணியிலும் உள்ள முன்னணி வீரர்களை ஆட வைத்து சில்லரை பார்க்கத் தெரிந்த ஜியோ ஓணரால்... தனது அணி வீரர்களை சரியாக விளையாட வைக்க முயற்சிகள் எடுக்க முடியவில்லை. எப்படியாவது பணம் கொடுத்து மேலே வந்துவிடுவார்கள் என, அரசியலோடு ஆன்மீகம் கலந்த சித்தாந்தம் பேசும் என்போன்ற கிரிக்கெட் விமர்சகர்கள் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறோம்... மும்பை மேலே வந்த பாடு இல்லை.

மும்பையில் ஸ்பின்னர் மார்கன்டேயனைத் தவிர, சகலபாடிகள் யாரும் வெற்றிக்கு முயன்றதாக தெரியவில்லை, கூட்டு முயற்சியில் கோட்டை விட்டுக்கொண்டே இருந்தால்... மற்ற ஏழு அணிகளும் சேர்ந்து, மும்பை அணியை (அமிதாப் தாத்தா சொல்வது போல்) தாறுமாறா ஆக்கிடும்.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் 18 சிக்ஸர்கள் விளாசி சிறந்த பார்மில் இருந்த கிறிஸ் கெயிலை, ஐபிஎல் ஏலத்தில் எல்லா அணிகளும் புறக்கணித்ததன் விளைவை, இன்று பஞ்சாப்பை தவிற அனைத்து அணிகளும் அனுபவித்து வருகின்றன... மனுஷனுக்கு வயசானாலும் அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி தான் இறங்குது. கெயிலின் அடியும் பிரீத்தி ஜிந்தாவின் உற்சாகமும், இந்த சீசனை வெற்றிகரமாக எடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கருதப்படுகிறது.

அதுபோல், கடந்த ஐபிஎல் சீசனில் கவனிக்கப்படத்தக்க கேப்டனாக ஜொலித்தவர் காம்பீர், பிறந்த மண்ணுக்கு திரும்பிய நேரமோ என்னவோ, பழைய பன்னீர்செல்வத்தை பார்க்க முடியவில்லை. கடந்த சீசனில் லையன் காயம் காரணமாக வெளியேற, யாரும் எதிர்பார்க்காத விதமாக சுனில் நரேனை ஓப்பனராக அறிமுகப்படுத்தினார். நரேன் இன்று வரை செம பார்மில் உள்ளார். கொல்கத்தாவுக்காக நரேனை வளர்த்துவிட்ட கம்பீரால்... டெல்லியில் ஒரு நரைமுடியை கூட வளர்க்க முடியாதது ஏமாற்றம் தான்.

அந்த இடத்தை அன்டர் நைன்டீன் ஹீரோ ப்ரித்வி ஷா நிரப்ப வாய்ப்புள்ளது.. "வாய்ப்புகள் அளிக்கப்பட்டால்"மற்றபடி, கம்பீரைப் போல் விராட் கோலி, ஷிகர் தவான் போன்ற நட்சத்திரங்கள் அணிக்கு திரும்பினாலொழிய... டெல்லி கோப்பையை வெல்வது கனவுதான். ஐபிஎல்லின் "செல்ல இளைஞர்களுக்கான தேடலில்" மார்கண்டே, சித்தார்த் கால், ரஷித் கான், பாசில் தம்பி, முர்ஜீப், ராஜ்பூட், தாக்கூர், போன்றோர், சூப்பர் ஸ்விங்கர் ஜூனியர்களாக வலம் வருகிறார்கள்.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
ipl-suspended-due-to-corona-crisis
வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
ipl-cricket-chennai-super-kings-won-by-7-wickets
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
Tag Clouds