கெத்து காட்டிய இந்திய அணி...வழிக்கு வந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட்

by Rahini A, May 8, 2018, 17:08 PM IST

பகலிரவு டெஸ்ட் போட்டித் தொடருக்கு தொடர்ந்து வலியுறுத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை தன் வழிக்கு இழுத்துள்ளது பிசிசிஐ.

கிரிக்கெட் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சர்வதேச அளவில் மிகப்பெரும் அவப்பெயரை சம்பாதித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. கிரிக்கெட் விளையாட்டு என்றாலே ஆஸ்திரேலியாதான் என்ற நிலை மாறி சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி.

இழந்த மரியாதையை எப்படியாவது சம்பாதித்து விடவேண்டும் என்ற குறிக்கோளில் உள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட். 

இந்நிலையில், இந்திய அணியை தொடர்ந்து பகலிரவு ஆட்டத்தை ‘பிங்க் பந்து ஆட்டம்’ முறையில் விளையாட ஆஸ்திரேலியா வலியுறுத்தி வந்தது. ஆனால், “எங்களை யாரும் வற்புறுத்த முடியாது. எங்கள் அணி தற்போதைக்கு எந்தவொரு பகலிரவு ஆட்டமும் விளையாடது” என இந்திய அணி மறுத்துவிட்டது.

சர்வதேச அளவில் பெரிய கிரிக்கெட் அணிகள் இதுபோன்ற பிங்க் பந்து ஆட்ட முறையை தவிர்த்தே வருகின்றனர். இந்த வகையில் இந்திய அணியும் தொடர்ந்து மறுத்து வந்தது. இதையடுத்து தற்போது வழிக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் பகலிரவு ஆட்டத்தைக் கைவிட்டுள்ளது.

டிசம்பர் மாதம் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டித் தொடர் பகல் ஆட்டமாகவே நடக்கும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading கெத்து காட்டிய இந்திய அணி...வழிக்கு வந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை