நானும் பந்தை சேதப்படுத்தியிருப்பேன்- சிக்கலில் ஆஸி., கிரிக்கெட் கோச்

by Rahini A, May 12, 2018, 12:18 PM IST

பந்தை சேதப்படுத்திய விவகாரமே இன்னும் தீராத நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரின் பேட்டி தற்போது விவகாரமாகியுள்ளது.

கிரிக்கெட் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சர்வதேச அளவில் மிகப்பெரும் அவப்பெயரை சம்பாதித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. கிரிக்கெட் விளையாட்டு என்றாலே ஆஸ்திரேலியாதான் என்ற நிலை மாறி சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது ஆஸ்திரேலியா அணி.

இந்நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரரான ஜஸ்டின் ஆஸ்திரேலிய அணி இழந்த மதிப்பை மீண்டும் பெற்றுத்தந்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் களம் இறங்கியிருப்பதாக முதல் நாளிலேயே பேட்டியளித்தார்.

தற்போது மற்றொரு பேட்டியில் லாங்கர், “நான் ஒரு கிரிக்கெட் வீரனாக எனது சீனியர் என்னை பந்தை சேதப்படுத்தச் சொல்லியிருந்தால் நானும் அதுபோலவே செய்திருப்பேன். இதுதான் பான்க்ராஃப்ட் நிலையும்” என பான்க்ராஃப்ட்க்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

இது விவகாராத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது என விமர்சனங்கள் எழுந்தாலும் காயப்பட்டவர்களை சரியான வழிகாட்டுதலுடன் நடத்தினால் அவர்கள் இன்னும் சிறப்பாக மீண்டு வருவர் என பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்காக ஆதரவு அளித்துள்ளார் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading நானும் பந்தை சேதப்படுத்தியிருப்பேன்- சிக்கலில் ஆஸி., கிரிக்கெட் கோச் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை