ஆஸ்திரேலிய கிரிக்கெட் சர்ச்சை… கரித்துக் கொட்டும் ஷேன் வார்னே!

by Rahini A, May 19, 2018, 13:19 PM IST

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தேக்கம் நிலவி வரும் நிலையில், மனம் திறந்து குமுறியுள்ளார் அந்நாட்டின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே.

பந்தை சேதப்படுத்திய வழக்கில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, அணியின் பயிற்சியாளர் டேரன் லேமனும் விலகிக் கொண்டார். இதனால், கிரிக்கெட்டில் பல ஆண்டுகள் கோலோச்சிய ஆஸ்திரேலியா, தற்போது குழப்பத்தில் இருக்கிறது. அணியை திரும்பி பழைய நிலைமைக்குக் கொண்டு வர ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகமும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், இதுவரை எதவும் அந்த அளவுக்கு பலனலிக்கவில்லை. இந்நிலையில் அணியின் நிலை குறித்து முதன்முறையாக மனம் திறந்து குமுறியுள்ளார் ஷேன் வார்னே. `மிகக் குழப்பமான நிலையில்தான் இன்றைய ஆஸ்திரேலிய கிரிக்கெட் இருக்கிறது. மீண்டு வருவது சவாலாகத்தான் இருக்கப் போகிறது.

அதே நேரத்தில் ஆஸ்திரேலியா, தங்களது பாணியை மாற்றிக் கொண்டு களத்தில் ஆட வேண்டும் என்று சொல்வதில் எனக்கு விருப்பமில்லை. நியூசிலாந்து அணி போல ஆஸ்திரேலிய கள ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டுமாம்.

கண்டிப்பாக, அப்படி செய்யக் கூடாது. அப்படி செய்தால், அது நமக்கு எதிராகத்தான் முடியும். ஆஸ்திரேலியாவுக்கென்று ஒரு கெத்து இருக்கிறது. அந்த கெத்துடன் மறுபடியும் களத்தில் இறங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார் வார்னே.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஆஸ்திரேலிய கிரிக்கெட் சர்ச்சை… கரித்துக் கொட்டும் ஷேன் வார்னே! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை