தோனியின் மகள் ஜிவாவின் அசத்தல் வீடியோ! புனே ரசிகர்களுக்கென தோனி பதில்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தன் குழந்தை ஜிவா-வுடன் சேர்ந்து ஒரு நெகிழ்ச்சியான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த ஐபிஎல் சீசனின் கடைசி லீக் போட்டியை பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடியது. இந்தப் போட்டி புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் சென்னையை அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தால், ப்ளே-ஆஃப் சுற்றுக்கு பஞ்சாப் தகுதி பெறலாம் என்ற நிலை இருந்தது.

தோனி தலைமையிலான சென்னை அணி, பஞ்சாப்பை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கெத்தாக ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இந்தப் போட்டி முடிந்த பின்னர், தன் மகள் ஜிவாவுடன் விளையாடும் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டகிராமில் வெளியிட்டார் தோனி.

`இந்த ஐபிஎல் சீசனின் கடைசி போட்டியின் முடிவல் ஜிவா என்னுடன் வந்துள்ளார். எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்த புனேவுக்கு மனமார்ந்த நன்றிகள். நாங்கள் உங்களை மகிழ்வித்தோம் என்று நம்புகிறோம்' என்று அந்த வீடியோவுடன் பதிவிடப்பட்டது.

போட்டிக்குப் பின்னர், தன் மகள் ஜிவாவுடன் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார் தோனி. இந்த வீடியோவை சி.எஸ்.கே தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது. இந்தப் போட்டியில் ரவிசந்தர் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சென்னை அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தால், ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கும்.

ஆனால், சென்னை அணி வெற்றி பெற்றதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
ipl-suspended-due-to-corona-crisis
வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
ipl-cricket-chennai-super-kings-won-by-7-wickets
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
Tag Clouds