மிரட்டலான ஆட்டத்தால் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது சிஎஸ்கே

May 27, 2018, 23:29 PM IST

2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி 20 தொடர், கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி முதல் ஆரம்பமானது. இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணி இம்முறை கலந்துக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை ஆடி பைனஸ்சுக்கு முன்னேறியது.

இவர்களுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பைனல்ஸ்க்கு முன்னேறியது. இந்நிலையில், 2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி 20 தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணி மும்பை வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் இடையே போட்டி தொடங்கியது.

முன்னதாக,டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில் வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும், தவான் 26 ரன்களும், ஹசன் 23, ப்ராட்வேய்ட் 21 ரன்களும் எடுத்தனர். முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 178 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் இங்கிடி, தாகூர், கரண் சர்மா, பிராவோ, ஜடேஜா தலா 1 விக்கெட் எடுத்தனர்.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணியின் வாட்சன் முதலில் 10 பந்துகள் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. பின்னர் சூடு பிடித்த ஆட்டம் வாட்சன் 57 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து அசத்தினார். டுப்லெஸிஸ் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் களம் இறங்கிய ரெய்னா 32 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அதன் பின் வந்த ராயுடு 19 பந்துகளில் 16 ரன்கள் விளாசினார். இறுதியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 18.3ஓவரில் 181 ரன்கள் வெற்றி இலக்கை எளிதாக எட்டியது.

இரண்டு வருடம் கழித்து வந்த சென்னை அணி கோப்பையை வென்று இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அணி ஐபிஎல்-லில் 3வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. (2010, 2011, மற்றும் 2018) இதுவரை சென்னை அணி 7 முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதில் 3 முறை கோப்பையை கை பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மிரட்டலான ஆட்டத்தால் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது சிஎஸ்கே Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை