பதவி விலகினார் ரியல் மாட்ரிட் அணி பயிற்சியாளர் ஜிடான்!

by Rahini A, Jun 1, 2018, 11:40 AM IST

சர்வதேச புகழ்பெற்ற கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட் பயிற்சியாளராக இருந்த ஜினடேன் ஜிடான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக ஜிடான் நியமிக்கப்பட்டார். 2020-ம் ஆண்டு வரை அவர் பயிற்சியாளராக இருக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இதையடுத்து பல அதிரடி மாற்றங்களை செய்த ஜிடான், மாட்ரிட் அணியை தொடர்ந்து மூன்று முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பை வெல்ல வைத்தார்.

கடந்த சனிக்கிழமை லிவர்பூல் அணிக்கும் ரியல் மாட்ரிட் அணிக்கும் இடையில் சாம்பியன்ஸ் லீக் கோப்பையின் இறுதிப் போட்டி நடந்தது. இதில் மாட்ரிட் அணி, 3-1 என்ற கணக்கில் லிவர்பூல் அணியை தோற்கடித்து தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது

இந்த அசாத்திய சாதனைக்குக் காரணமாக இருந்தவர் பயிற்சியாளர் ஜிடான் தான் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க, போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அவர்யாரும் எதிர்பாராத விதமாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஜிடான், `இந்தப் போட்டியோடு நான் ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக முடிவெடுத்து உள்ளேன்.

இது குறித்து நான் அதிகம் யோசித்தேன். ஆனால், இனிமேலும் மாட்ரிட் அணியை வழி நடத்திக் கொண்டு போக முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. சாம்பியன்ஸ் லீக் கோப்பையை மூன்று முறை வென்று கொடுத்து விட்டேன்.

இதற்கு மேல் அதை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் தோல்வியடைய விரும்பவில்லை. நான் வெற்றியாளன். வெற்றி பெரும் இடத்தில் மட்டும் தான் இருப்பேன். இந்த முடிவை எடுக்க வேறு எந்த கிளப் அணியும் காரணமில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்' என்று கூறி அதிர்ச்சிக் கிளப்பியுள்ளார்

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பதவி விலகினார் ரியல் மாட்ரிட் அணி பயிற்சியாளர் ஜிடான்! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை