ரசிகர்களுக்கு கை கூப்பி நன்றி தெரிவித்த கால்பந்து இந்திய அணி கேப்டன்

4 நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இன்டெர்காண்டினெண்டல் கால்பந்து விளையாட்டு போட்டி  மும்பையில் நடைபெற்று வருகிறது.
இந்தியா, கென்யா, நியூஸிலாந்து, மற்றும் சீனா தைபே என நான்கு நாடுகள் பங்கு பெரும் இன்டெர்காண்டினெண்டல் கால்பந்து போட்டி ஜூன் 1 துவங்கி நடைபெற்று வருகிறது. 
 
முதல் ஆட்டத்தில் சீனா தைபே அணியுடன் மோதிய இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 2ம் ஆட்டத்தில் கென்யா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின அதில் கென்யா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிக்கணக்கை துவங்கியது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் கென்யா அணிகள் மோதின. அதில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 
 
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் 2 கோல் அடித்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். ஜெ.ஜெ.1 கோல் அடித்தார்.
இரண்டு நாட்கள் முன்பு இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஒரு வீடியோ பதிவினை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அதில் தான் 100வது போட்டியில் பங்கேற்க போவதாகவும் கிரிக்கெட்டை போன்று கால்பந்துக்கும் நீங்கள் ஆதரவு தரவேண்டும் என்றும், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் பதிவிட்டார். இது, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி , கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் ஆதரவு தர தூண்டியது. 
 
இந்திய, சீனா தைபே அணிகள் மோதிய  போட்டியை வெறும் 2570 நபர்களே நேரில் பார்க்க வந்த நிலையில், நேற்று நடைபெற்ற இந்திய-கென்யா அணிகள் மோதிய விளையாட்டை பார்க்க அரங்கம் நிரம்பியது. இதனை அறிந்த இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி உற்சாகமடைந்து 2 கோல்கள் அடித்தார்.
 
ட்விட்டரில் ஒரு பதிவினை பதிவிட்டார் சுனில் சேத்ரி. அதில், "இதே போல ஆதரவு நாங்கள் நமது நாட்டிற்காக விளையாடும் அணைத்து போட்டிகளுக்கும் கிடைத்தால், எங்களது உயிரையும் கொடுத்து விளையாடுவோம், என்றும், இன்றைய இரவுப்பொழுது எனக்கு ஒரு சிறப்பானதாக உள்ளது காரணம் உங்களுடன் இந்த வெற்றியை இன்று பகிர்ந்து கொண்டது என்றும், எங்களுக்காக ஆதரவு கொடுத்தவர்களுக்கும், உற்சாக வார்த்தைகளை கூறி, ஆரவாரம் செய்த அனைவருக்கும் நன்றி" என ட்விட்டியுள்ளார் சுனில் சேத்ரி.
ஆட்டம் முடிந்ததும், நெகிழ்ச்சியுடன் அவர் ரசிகர்களுக்கு கை கூப்பி நன்றி தெரிவித்துக்கொண்டார்.இதே போல் நாங்கள் விளையாடும் அனைத்து போட்டிகளுக்கும் நீங்கள் ஆதரவு தந்தால் அனைத்து போட்டிகளிலும் எங்களால் வெற்றி பெறமுடியும் என்று கூறினார். ரசிகர்களின் கை தட்டல்களும், உற்சாக வரவேற்பும் தான் எங்களை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் என்று நம்புவதாகவும் சுனில் சேத்ரி கூறினார்.
Advertisement
மேலும் செய்திகள்
ipl-suspended-due-to-corona-crisis
வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
ipl-cricket-chennai-super-kings-won-by-7-wickets
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி