மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் 4-ஆவது லீக் போட்டி #MTBC

மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் லீக் போட்டி

Jun 9, 2018, 22:40 PM IST

அமெரிக்காவில் மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட்டின் நான்காம் கட்ட லீக் போட்டி சமீபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

MTBC

அமெரிக்காவில் மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் முதல் வாரம் தொடங்கி ஆகஸ்டு மாதம் இறுதி வரை நடைபெறுகிறது.

விளையாட்டின் தொடக்க நாள் முதல் ஒவ்வொறு லீக் போட்டியும் வாரத்தின் இறுதி நாட்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மூன்று லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், நான்காவது லீக் போட்டி கடந்து முடிந்தது.

ஒவ்வொரு லீக் போட்டியிலும் 54 அணிகளுக்கு இடையே 27 போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பாக நடைபெற்ற கடந்த நான்கு லீக் போட்டிகளில், முன்னிலையில் இருக்கும் வீரர்கள் குறித்து பார்ப்போம்.

குரூப்-E ன் MN Mavericks அணியை சேர்ந்த யசோதா பப்பிநிதி மொத்தம் நான்கு வார போட்டிகளில் 741 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இவரை தொடர்ந்து, குரூப் B-ன் Desi Pandits 4 வார போட்டிகளில் 674 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும், குரூப் C-ன் Cummins Cricket Club சேர்ந்த முரளி ரவீந்திரன் 655 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

இவர்களை அடுத்து, குரூப் D-ன் Champions United அணியை சேர்ந்த சரவணன் சசுராவும், குரூப் C-ன் GXI அணியை சேர்ந்த பிரஷாந்த் சர்மா ஆகியோர் முறையே 655 மற்றும் 635 மதிப்பெண்கள் பெற்று 4 மற்றும் 5ம் இடங்களை பெற்றுள்ளனர்.

MTBC

குரூப்களின் அடிப்படையில் அணிகள் எடுத்துள்ள புள்ளி விவரம்:

குரூப் A:

Minnesotta Indians மற்றும் Indian Colts ஆகிய அணிகள் விளையாடிய 4 போட்டிகளின் அடிப்படையில், 24 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளன.

குரூப் B:

Desi Pandits அணி மற்றும் Indian Knights ஆகிய அணிகள் விளையாடிய 4 போட்டிகளின் அடிப்படையில் முறையே 24 மற்றும் 18 புள்ளிகள் எடுத்து முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ளன.

குரூப் C:

Cummins Cricket Club அணி விளையாடிய 4 போட்டிகளின் அடிப்படையில் 24 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், தொடர்ந்து 18 புள்ளிகள் பெற்று Titans அணி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

MTBC

குரூப் D:

Gujju XI அணி விளையாடிய 4 போட்டிகளின் அடிப்படையில் 24 புள்ளிகள் பெற்று முதல் இடம். தொடர்ந்து Champions United 18 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

குரூப் E:

இந்த குரூப்பில், MN Mavericks, 11 Dulkars மற்றும் Epic ஆகிய அணிகள் தலா 18 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளன.

குரூப் F:

V Rock, Rising Warriors ஆகிய அணிகள் விளையாடிய 4 போட்டிகளில் தலா 24 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளனர். தொடர்ந்து, Mighty minns அணி 18 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

பின்னர், லீக் போட்டியின் முடிவில் முதல் 32 இடங்களில் உள்ள அணிகள் அடுத்தகட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், அடுத்த லீக் போட்டி வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் 4-ஆவது லீக் போட்டி #MTBC Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை