உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கடந்த ஜூன் 14ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
32 அணிகள் 8 பிரிவுகளின் கீழ் விளையாடி வருகிறது. அறிமுக அணிகள் மற்றும் சிறிய அணிகளும் திறமையாக விளையாடி வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் அதிர்ச்சி அளித்து வருகிறது.
10ம் நாளான இன்று 3 போட்டிகள் உள்ளன. அதில் ஜி பிரிவில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி அறிமுக அணியான பனாமாவை எதிர் கொண்டது.
ஆட்டம் ஆரம்பம் முதலே இங்கிலாந்தை சமாளிக்க முடியாமல் திணறியது பனாமா அணி. இதனால் இங்கிலாந்து அணி கோல்களை அடித்து பந்தாடியது.
முதல் பாதியில் இங்கிலாந்து அணி 5 கோல்களை அடித்து இமாலய வெற்றிக்கு அடித்தளமிட்டது.ஸ்டோன்ஸ் முதல் கோல் அடித்து கணக்கை துவங்கினார். இரண்டாவது கோலுக்கு பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தினார் கேப்டன் ஹாரி. லிங்கார்ட் 3வது கோல் அடித்தார். 4வது கோல் ஸ்டோன்ஸ் மறுபடியும் அடிக்க, 5வது கோல் மறுபடியும் பெனால்டி மூலம் அடித்து கொடுத்தார் கேப்டன் ஹாரி கேன்ஸ்.
இரண்டாம் பாதியில் 5-0 என்ற முன்னிலையுடன் துவங்கிய இங்கிலாந்து அணி 6வது கோல் அடித்தார் ஹாரி கேன்ஸ். பின்னர், ஒருவழியாக பனாமா அணிக்காக முதல் கோல் அடித்தார் பாலாய்.
ஒரு அணி முதல் பாதியில் இத்தனை கோல்கள் அடித்தது இது 5வது முறை. முதல் முறையாக பிரேசில் அணி 2014 ம் ஆண்டு அரையிறுதியில் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.