சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்துள்ளது.
நெதர்லாந்தில் 37 வது சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடர் நடந்ததது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, நெதர்லாந்து, இந்தியா போன்ற முன்னணி அணிகளுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவியது.
இந்திய அணி அனைத்துத் தடைகளையும் தாண்டி இறுதிப் போட்டியில் வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. போட்டி ஆரம்பித்த 24 வது நிமிடத்தில் கார்னர் எரியாவிலிருந்து அடித்த பந்தை, ஆஸ்திரேலியாவின் பிளாக் க்ரோவர்ஸ் கோலாக மாற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியின் விவேக் சாகர் பிரசாத் ஒரு ஃப்லீடு கோல் போட்டார்.
பின்னர் இரண்டு அணிகளும் கோல் போட எடுத்த முயற்சிகள் எதுவும் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கவில்லை. இதனால், பெனால்டி ஷூட்-ஆஃப் நடத்தப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா 3 கோல்களை போட, இந்திய ஒரு கோல் மட்டுமே அடித்தது.
இதனால், சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய ஹாக்கி அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்விகண்டுள்ளது. சென்ற முறையும் ஷூட்-ஆஃப் முறையில்தான் ஆஸ்திரேலியா இந்தியாவை வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.