ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை- புதின் தலைமையில் இறுதி விழா

Jul 10, 2018, 13:24 PM IST

ரஷ்யாவில் நடைபெற்று வரும் ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரில் காண உள்ளார்.

ஃபிபா உலக கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலைநில் இன்னும் அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி மட்டும் தான் பாக்கி உள்ளது. முதல் அரையிறுதிப் போட்டி இன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் இடையில் நடைபெற உள்ளது. இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து, க்ரோஷியா அணிகள் நாளை மோத உள்ளன.

அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் வரும் 15 ஆம் தேதி மாஸ்கோவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும். இந்நிலையில், தொடரின் முதல் போட்டியை நேரில் கண்டுகளித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இறுதிப் போட்டியையுப் பார்ப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷ்யத் தரப்பு, ‘ரஷ்யா விளையாடிய போட்டிகளில் புதின் நேரில் கலந்து கொள்ளாததால் அவர், நம் அணிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. அவருக்கு நேரம் கிடைக்காததே காரணம். நேரில் வந்து போட்டிகளை பார்க்க முடியாத போதும் அதிபர், தொடர்ந்து அணியின் பயிற்சியாளரிடம் நடக்கும் சம்பவங்கள் குறித்து தொடர்ந்து பேசி வந்தார்.

இந்நிலையில், அவர் இறுதிப் போட்டியை கண்டிப்பாக வந்து பார்ப்பார் என்று நம்புகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

You'r reading ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை- புதின் தலைமையில் இறுதி விழா Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை