இந்திய அணி வீரர் ஷிகர் தவான் அதிவேக 4000 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியா இலங்கை இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
இதில் இந்திய அணி வீரர் ஷிகர் தவான் அபார சதம் விளாசினார். அத்துடன் மேலும் பல சாதனைகளை புரிந்தார். இந்தப் போட்டியில் ஷிகர் தவான் 4000 ரன்களை கடந்தார். இதன் மூலம் இந்திய அளவில் இரண்டாவது அதிவேக 4000 ரன்களை [94 இன்னிங்ஸ்] குவித்து சாதனை புரிந்துள்ளார். முன்னதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி 93 இன்னிங்ஸில் இந்த சாதனையை புரிந்துள்ளார்.
சர்வதேச அளவில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லா [81 இன்னிங்ஸ்] முதலிடத்தில் உள்ளார். விவியன் ரிச்சர்ட்ஸ் [88 இன்னிங்ஸ்] அடுத்த இடத்தில் உள்ளார். மூன்றாவதாக ஜோ ரூட் அவர்களும், நான்காவது இடத்தில் விராட் கோலியும் உள்ளனர்.