விசா போராட்டம் வெற்றி.. இளம் மேதையை தக்க வைத்தது இங்கிலாந்து

இளம் மேதையை தக்க வைத்தது இங்கிலாந்து

Aug 12, 2018, 08:43 AM IST

செஸ் விளையாட்டில் உலக தரத்தில் நான்காம் இடம் வகிக்கும் ஸ்ரேயாஸ் ராயல், இங்கிலாந்தில் வசிப்பதற்கு உள்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஸ்ரேயாஸின் தந்தை ஜிதேந்திர சிங்கின் விசா போராட்டம் வெற்றியாக முடிந்துள்ளது.

Shreyas Royal

ஜிதேந்திர சிங், டாடா நிறுவனம் ஒன்றின் பணியாளர். அவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பணிக்காக பெங்களூருவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்டார். அவரது விசா, வரும் செப்டம்பர் மாதத்தில் முடிவடைய இருக்கிறது. ஜிதேந்திர சிங் இங்கிலாந்துக்கு சென்றபோது, அவரது மகன் ஸ்ரேயாஸ் ராயல், மூன்று வயது குழந்தையாக இருந்தான். இங்கிலாந்தில் சதுரங்க விளையாட்டு பயிற்சி பெற்ற அவன், இளம் சதுரங்க மேதையாக வளர்ந்தான்.

தற்போது ஸ்ரேயாஸ் ராயலுக்கு ஒன்பது வயதாகிறது. இங்கிலாந்தில் இருப்பதால், சர்வதேச செஸ் போட்டிகளில் இங்கிலாந்து சார்பாக விளையாடி வருகிறார். ஸ்ரேயாஸ் ராயலின் தந்தை ஜிதேந்திர சிங்கின் விசா செப்டம்பரில் முடிவடைவதால் அவர் இந்தியா திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆண்டுக்கு 1,20,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் வருமானம் ஈட்டினால் மட்டுமே அவர் தொடர்ந்து விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.

தங்கள் மகன் இங்கிலாந்தில் பயிற்சி பெற்று, இங்கிலாந்துக்காக விளையாடி வருவதால் தொடர்ந்து அங்கு வசிக்கும்படி ஸ்ரேயாஸின் பெற்றோர் ஜிதேந்திர சிங்கும், அஞ்சு சிங்கும் விரும்பினர். ஜிதேந்திர சிங் பணியாற்றும் நிறுவனம், அவர் தொடர்ந்து அதே ஊதியத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பணியாற்றலாம் என்று மட்டும் அனுமதித்தது.

இந்நிலையில், "சிறந்த அறிவாளிகள், திறமைசாலிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வந்து பணியாற்ற, வாழ்வதற்கு ஊக்குவிக்க வேண்டும்" என்று தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரேச்சல் ரீவ்ஸ் மற்றும் மேத்யூ பென்னிகுக் ஆகியோர் உள்துறை செயலர் ஸாஜித் ஜாவித்துக்கு கடிதம் எழுதினர்.

Shreyas Royal

விசா விண்ணப்பங்கள் அவற்றுக்கு உரிய விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்திருந்த ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அலுவலகம், "ஸ்ரேயாஸின் அசாதாரண திறமையை கருத்தில்கொண்டு விசா விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது. டயர் 2 பொது விசா வகையில் நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்கிக்கொள்ளலாம்" என்று மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது.

"நாங்கள் எடுத்த முயற்சி பலன் கொடுத்ததிலும், ஸ்ரேயாஸின் திறமை அங்கீகரிக்கப்பட்டதிலும் மகிழ்ச்சி," என்று இங்கிலீஷ் செஸ் பெடரேஷன் தலைவர் டொமினிக் லார்சன் தெரிவித்துள்ளார்.

ஒன்பது வயதான ஸ்ரேயாஸ் ராயல், அவரது வயதுக்கான வீரர்களுள் உலக அளவில் நான்காவது இடத்தை தற்போது வகிப்பதாகவும், எதிர்காலத்தில் உலக சாம்பியனாக வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

You'r reading விசா போராட்டம் வெற்றி.. இளம் மேதையை தக்க வைத்தது இங்கிலாந்து Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை