இறுதிச்சுற்றில் மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி: 8 அணிகள் களத்தில்..

Advertisement

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட்டின் இறுதிக்கட்டத்திற்கு முன்னேறிய 8 அணிகள் இன்று (25.08.2018) இறுதி போட்டியில் களமிறங்குகின்றன.

அமெரிக்காவில் மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் முதல் வாரம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போட்டியின், தொடக்க நாள் முதல் ஒவ்வொறு லீக் போட்டியும் வாரத்தின் இறுதி நாட்களில் நடைபெற்று வந்தன. ஒவ்வொரு லீக் போட்டியிலும் 54 அணிகளுக்கு இடையே 27 போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பாக நடைபெற்ற லீக் போட்டிகளின் முடிவில், 36 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. இதன் பிறகு ஒவ்வொரு ஆட்டத்திலும் அணிகள் தோல்வியடைந்து வெளியேறின. காலிறுதி சுற்று, அரையிறுதி சுற்றுகளில் விளையாடிய அணிகளில், இறுதியாக 8 அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இந்த சுற்றில், Champions United, solitaire oaks, Chariots of Fire, Smashers, 11 Dulkars, Indian Knights, Indus Knights, Indian Colts ஆகிய அணிகள் இறுதிச்சுற்றில் போட்டியிடுகின்றன. அதன்படி, Champions United மற்றும் solitaire oaks இடையே, Chariots of Fire மற்றும் Smashers இடையே, 11 Dulkars மற்றும் Indian Knights இடையே, Indus Knights மற்றும் Indian Colts இடையே இன்று நான்கு போட்டிகள் நடைபெறுகிறது.

மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட்-2018 போட்டியின் ஆடவர் பிரிவில், Smashers அணியை சேர்ந்த Sunny Amin, Desi Pandits அணியை சேர்ந்த Yesudhasan V, Gujju XI அணியை சேர்ந்த Hardik Pandit, MN Mavericks அணியை சேர்ந்த Amar Paul, Gujju XI அணியை சேர்ந்த Ajish Madhavan, Indian Colts அணியை சேர்ந்த Karthik Mani ஆகியோர் சிறந்த விளையாட்டு வீரர்களாக உள்ளனர்.

மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட்-2018 இறுதி போட்டி, Northview Athletic Park Eagan, 980 Northview Park Road Eagan என்ற இடத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை காண ஏராளமாக ரசிகர்கள் திரண்டிருப்பதாக தி சப்எடிட்டர் சிறப்பு நிருபர் ரமேஷ் மைதானத்திலிருந்து தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
ipl-suspended-due-to-corona-crisis
வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
ipl-cricket-chennai-super-kings-won-by-7-wickets
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
/body>