அமெரிக்கா ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் நடுவருடன் வாக்குவாதம் செய்த செரினா வில்லியம்ஸ்க்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னீஸின் இறுதிப் போட்டியில் செரினா வில்லியம்ஸ்ம், ஜப்பான் வீராங்கனை ஓசாகாவும் மோதினர். 6-2, 6-4 எனும் நேர் செட்டில் செரினாவை வீழ்த்தி நவோமி ஒசாகா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.
அந்தப் போட்டியின்போது, நடுவர் செர்ஜியோ ரமோஸ் செரினாவுக்கு எதிராக புள்ளிகள் வழங்கியபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நடுவரை திருடன் என்று திட்டியதோடு தரற்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. அத்துடன் போட்டியின் போது, செரினா 3 முறை விதிமுறை மீறியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்கா டென்னிஸ் ஆணையம் செரினாவுக்கு அபராதம் விதித்துள்ளது. நடுவரை தரக்குறைவாக பேசியதற்காக ரூ.7.21 லட்சம், விதிமீறி பயிற்சியார் சைகை செய்ததற்கு ரூ. 2.88 லட்சம், ஆத்திரத்தில் டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்ததற்கு ரூ. 2.16 லட்சம் என மொத்தம் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டும் என்ற பழமொழியை நிரூபிக்க வகையில் செரினாவின் செயல் உள்ளது.