இறுதிப் போட்டியில் ஹாட்-ட்ரிக் வீழ்த்தி ரஜ்னீஷ் குர்பானி அபார சாதனை

ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்-டிரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி ரஜ்னீஷ் குர்பானி அபார சாதனை படைத்துள்ளார்.

Dec 30, 2017, 13:59 PM IST

ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்-டிரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி ரஜ்னீஷ் குர்பானி அபார சாதனை படைத்துள்ளார்.

டெல்லி-விதர்பா அணிகளுக்கு இடையேயான ரஞ்சிக் கோப்பையின் இறுதிப்போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய டெல்லி அணி 10 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதிகப்பட்சமாக துருவ் ஷொரே 145 ரன்களும், ஹிம்மத் சிங் 66 ரன்களும் எடுத்தனர். வித்ரபா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி தொடர்ந்து விளையாடி வருகிறது.

விதர்பா அணி தரப்பில் ரஜ்னீஷ் குர்பானி ஹாட்-ட்ரிக் உட்பட 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், இந்த போட்டியில் விகாஷ் மிஸ்ரா, நவ்தீப் ஷைனி, துருவ் ஷொரே, குல்வந்த் கெஜ்ரோலியா ஆகியோரை தொடர்ந்து வெளியேற்றினார்.

இதன் மூலம் ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்-ட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக 1972/ 73ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழக வீரர் கல்யாண சுந்தரம் பாம்பே அணிக்கு எதிராக ஹாட்-ட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

அதேபோல ரஜ்னீஷ் குர்பானி அரையிறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் என மொத்தம் 12 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

You'r reading இறுதிப் போட்டியில் ஹாட்-ட்ரிக் வீழ்த்தி ரஜ்னீஷ் குர்பானி அபார சாதனை Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை