ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடருக்காக, இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்யணம் செய்து விளையாடி வருகிறது, நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில், மூன்று வெற்றி ஒரு டிராவுடன் ஆஸ்திரேலியா ஏற்கனவே தொடரை கைப்பற்றிய நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 346 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 479 ரன்கள் அடித்து 133 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது, அதிகபட்சமாக உஸ்மான் காவ்ஜா 171 ரன்கள் குவித்து, தனது 6-வது சதத்தை பதிவு செய்தார், வார்னர் 56, மற்றும் ஸ்டீவன் ஸ்மித் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.
மார்ஷ் சகோதரர்களான ஷான் மார்ஷ் 98, மற்றும் மிட்ச்செல் மார்ஷ் 63 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.
ஸ்மித்திற்கு இது 61-வது போட்டியாகும். முதல் இன்னிங்சில் 26 ரன்களை தொட்டபோது 6000 ஆயிரம் என்ற மைல்கல்லை அவர் எட்டினார்.
111-வது இன்னிங்ஸில் 6000 ரன்களை அவர் எடுத்துள்ளார்,
இதன்மூலம் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஏற்கனவே 111 இன்னிங்ஸில் 6000 ரன்களை கடந்து இரண்டாம் இடத்தில் இருக்கும் மேற்கிந்திய தீவு வீரர் கேரி சோபர்ஸின் சாதனையை இவர் சமன் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் 68 இன்னிங்சில் 6 ஆயிரம் ரன்களை கடந்து அசைக்க முடியாத முதல் இடத்தில் உள்ளார்.
இந்த ஆஷஸ் தொடரில் இதுவரை 7 இன்னிங்ஸ்கள் விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் 687 ரன்கள் குவித்துள்ளார்.
நம்ம ஊரு கேப்டன் விராட் கோலியும் 107 இன்னிங்ஸில் 5273 ரன்களுடன் இரண்டாவது இடத்துக்கு போட்டியாக களத்தில் உள்ளார், மூன்று இன்னிங்ஸிலும் தொடர்ந்து இரட்டை சதங்கள் விளாசினால் மட்டுமே அந்த இடத்தை பிடிக்க முடியும்,
மேலும், ரன்களில் மட்டுமல்ல, டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலிலும் நம்ம ஊரு கேப்டன் விராட் கோலி, ஸ்மித்தை துரத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.