டெஸ்ட் போட்டியில் தோற்ற போதும் சாதனை படைத்த இந்திய வீரர்!

ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக பேரை கேட்ச் செய்து வெளியேற்றிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற புதிய சாதனையை விருத்திமான் சஹா படைத்துள்ளார்.

Jan 10, 2018, 13:32 PM IST

ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக பேரை கேட்ச் செய்து வெளியேற்றிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற புதிய சாதனையை விருத்திமான் சஹா படைத்துள்ளார்.

கேப்டவுனில் நடைபெற்ற இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வி அடைந்தது. இதன் மூலம் வெளிநாடுகளில் தொடர்ந்து இந்திய அணி சொதப்பி வருகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

டெஸ்ட் போட்டியில் தோற்றாலும், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா ஒரு சாதனை படைத்துள்ளார். அதாவது டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

விருத்திமான் சஹா முதல் இன்னிங்ஸில் ஐந்து கேட்சுகள் பிடித்து தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார். 2-வது இன்னிங்ஸில் ஐந்து பேரை வெளியேற்றினார். மொத்தம் 10 பேரை கேட்ச் மூலம் வெளியேற்றினார்.

இதற்கு முன் மகேந்திர சிங் டோனி 2014-ல் மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் 9 பேரை அவுட்டாக்கி சாதனைப் படைத்திருந்தார். அதில் அவர் 8 பேரை கேட்சுகள் மூலமாகவும், ஒருவரை ஸ்டெம்பிம் மூலமாகவும் வெளியேற்றினார்.

அது தற்போது சஹாவால் முறியடிக்கப்பட்டு உள்ளது. அதேபோல டர்பனில் 1996ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் நயன் மோங்கியா 8 கேட்சுகள் பிடித்திருந்தார்.

சர்வதேச அளவில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜாக் ரஸ்ஸல் 1995ஆம் ஆண்டு இதே தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 11 கேட்சுகள் பிடித்துள்ளார்.

You'r reading டெஸ்ட் போட்டியில் தோற்ற போதும் சாதனை படைத்த இந்திய வீரர்! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை