தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் முகமாக திகழ்ந்து வரும் காமராஜர் தற்போது அடியோடு புறக்கணிக்கப்படுவது அக்கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னையில் சக்தி என்கிற அமைப்பின் தொடக்க விழாவை காங்கிரஸ் கட்சி சில நாட்களுக்கு முன்னர் நடத்தியது. லோக்சபா தேர்தல் பணிகளுக்காகவும் கட்சியை வலுப்படுத்தவும் ராகுல் காந்தியின் உத்தரவின் பேரில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. அத்துடன் காமராஜர் அறக்கட்டளையில் இருந்து இந்நிகழ்ச்சிக்காக ரூ3 லட்சம் செலவும் செய்யப்பட்டது.
ஆனால் நிகழ்வு நடைபெற்ற பேனரில் காமராஜர் படம் இடம்பெறவில்லை. சென்னை வந்த சோனியாவும் ராகுல் காந்தியும் காமராஜர் நினைவிடத்துக்குப் போகவில்லை என்கிற சர்ச்சை ஏற்கனவே வெடித்தது.
தற்போது காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதும் காமராஜர் அறக்கட்டளையில் இருந்து செலவழிக்கப்பட்ட நிகழ்ச்சியில் காமராஜர் படமே இல்லை என்பது அக்கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.