எடப்பாடி பழனிசாமியும் தம்பிதுரையும் நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள் என பாஜக கூட்டணிப் பேச்சை முன்வைத்து விமர்சித்தார் தினகரன். இதற்குக் காரணம், பாஜகவில் உள்ள அவருடைய சோர்ஸ்கள்தானாம்.
கொடநாடு விவகாரத்தை முன்வைத்து திமுக தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. தினகரனும், விசாரணை வேண்டும் எனக் கூறிக் கொண்டிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக தனக்கு வேண்டிய பாஜக பிரமுகர்களிடம் பேசிய தினகரன், 'எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் வேலைகளைத் தொடர்ந்து நடத்துங்கள். எடப்பாடி சொல்லித்தான் தம்பிதுரை பேசிக் கொண்டிருக்கிறார். இவர்களால் எம்பி தேர்தலில் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது.
நீங்கள் சொல்லித்தான் நான் தனித்து நிற்கும் வேலைகளைச் செய்து வருகிறேன். இப்போதுள்ள அதிமுகவால் எதையும் சாதிக்க முடியாது. தேர்தலுக்குப் பிறகு நான் எத்தனை இடங்கள் வென்றாலும் மோடியை ஆதரிப்பேன். இதுதான் என்னுடைய நிலைப்பாடு.
எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் வேலைகளைத் தொடங்குங்கள்' எனக் கூறியிருக்கிறாராம். இதற்குப் பதில் கொடுத்த பாஜகவினரும், தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்னும் எந்த முடிவையும் அமித் ஷா எடுக்கவில்லை. தமிழக நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். நீங்கள் கூறும் வார்த்தைகளை கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம்' என ரிப்ளை கொடுத்திருக்கிறார்கள்.
-அருள் திலீபன்