கோவை எம்பி தொகுதியை மையமாக வைத்து வானதியும் சிபிஆரும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கோவை தொகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைச் செய்து வருகிறார் வானதி.
இலவச சேவை மையம், வேலைவாய்ப்பு முகாம் என தொகுதிக்குள் அடிக்கடி முகம் காட்டி வருகிறார்.
மத்திய கயிறு வாரியத்தின் தலைவராக இருப்பதால், அந்த வேலைகளில் ஆர்வம் காட்டி வருகிறார் சிபிஆர். ஏற்கெனவே கோவை தொகுதியில் 2 முறை எம்பியாக இருந்துவிட்டதால், இந்தமுறையும் தனக்கே மேலிடம் சீட் தரும் என எதிர்பார்க்கிறார். அதே நேரத்தில் நிர்மலா சீதாராமனின் அனுக்கிரகமும் கொங்கு பெல்ட் அமைச்சர்களின் ஆசிர்வாதமும் இருப்பதால் தனக்கே சீட் கிடைக்கும் என வானதி நம்புகிறார். வானதிக்கே அதிக சான்ஸ் இருப்பதால், திருப்பூர் தொகுதிக்குத் தாவுவாரா சிபிஆர் எனவும் விவாதித்து வருகின்றனர் கொங்கு பிஜேபியினர்.