சென்னை உள்பட 74 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிறிஸ்டி புட்ஸ், நெடுஞ்சாலைத்துறை சோதனைகளுக்குப் பிறகு சரவணா ஸ்டோர்ஸ், ரேவதி குழுமத்துக்குச் சொந்தமான இடங்களைத் துருவிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சோதனை பற்றிப் பேசும் அதிகாரிகள் சிலர், ' தேர்தலுக்கு முன்னதாக திமுகவுக்குப் பணம் வரக் கூடிய சோர்ஸுகளை முடக்கும் வேலைகளில் மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் ஈடுபட்டுள்ளது. ஸ்டாலின் குடும்பத்தினர் பார்ட்னராக இருக்கும் வர்த்தக நிறுவனங்கள், அவர்களுக்குப் பணத்தை வாரிக் கொடுக்கும் முதலாளிகள் என அனைத்து தரப்பினரையும் மொத்தமாக வளைப்பதற்குத்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
திமுகவில் உள்ள முக்கிய புள்ளிகள், மறைமுக கூட்டாளிகளாக அங்கம் வகிக்கும் தொழில் நிறுவனங்கள் தொடர்பான அத்தனை விவரங்களையும் டெல்லி சேகரித்துவிட்டது. தேர்தலுக்கு முன்னதாக பணப் பரிவர்த்தனைகளை மொத்தமாக முடக்க உள்ளனர்.
இதன் மூலம் திமுக, காங்கிரஸ் வட்டாரத்தில் பணப்புழக்கம் இல்லாமல் செய்ய உள்ளனர். இன்று தொடங்கிய இந்தச் சோதனை அவ்வளவு எளிதில் முடிவுக்கு வரப் போவதில்லை' என்கின்றனர்.
-எழில் பிரதீபன்