கூட்டணிக்குள் வராமல் பாட்டாளி மக்கள் கட்சி பாராமுகம் காட்டுவதை டெல்லி பாஜக பொறுப்பாளர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தேர்தல் சமயத்தில் மோடியை ஏற்றுக் கொண்டு நம்பக்கம் வருவார்கள் என அவர்கள் நம்புகின்றனர்.
இதைப் பற்றிப் பேசிய டெல்லி வட்டார பிரமுகர் ஒருவர், தமிழ்நாட்டில் மட்டும்தான் அறிக்கைகளை வெளியிட்டு வீரம் காட்டுவார் ராமதாஸ். டெல்லி வந்துவிட்டால், நம்மிடம் பவ்யம் காட்டுவார் அன்புமணி.
இவர்களுடைய வீரம் எல்லாம் தமிழக எல்லைக்குள் மட்டும்தான். இந்தூர் மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் நாம் நினைத்திருந்தால், அன்புமணியை ஒருவழி செய்திருக்க முடியும்.
கூட்டணிக்குள் இருந்து கொண்டு, மோடி பிரதமர் என்பதை ஏற்றுக் கொண்டு பிரசாரம் செய்ததால்தான் இத்தனை நாள்களாக அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் நாம் வேகப்படுத்தவில்லை. மத்திய அரசுக்கு எதிராகவும் அமித் ஷாவுக்கு எதிராகவும் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கைகளை எல்லாம் தொகுத்து வைத்திருக்கிறோம்.
அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு இந்தூர் விவகாரம் ஒன்று போதும். 2014 மட்டுமல்ல, 2019 தேர்தலிலும் நமக்காக வாக்கு கேட்பார் ராமதாஸ்' எனச் சொல்லி சிரித்தார்களாம்.
-அருள் திலீபன்