நடிகர் ரஜினிகாந்தை தலைவர் என அழைப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மிக மிக அவசரம் திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் சீமான் பேசியதாவது:
தலைவனை எங்கு தேடுகிறார்கள்? திரையரங்கில்தான்... எல்லாமே சினிமா என்றாகிவிட்டது.
ரஜினிகாந்தை ரஜினிகாந்த் என்று சொல்வது இல்லை. தலைவர் படத்துல.. தலைவருடன்... என்றுதான் ரஜினிகாந்தை அழைக்கின்றனர்.
தலைவன் என்றால் யார் என்பதை தெரியாத கூட்டத்தை எப்படி வாழ வைப்பது? சினிமாவில் நடிப்பவன் நடிகன்.. அவன் தலைவன் அல்ல..
ரஜினிகாந்த் உனக்கு தலைவன் என்றால் பிரபாகரன் உனக்கு யார்? காமராஜர் யார்? கக்கன் யார்? ஜீவானந்தம் யார்? சிங்காரவேலர் யார்? அயோத்திதாசர் யார்? ரெட்டைமலை சீனிவாசன் யார்? பசும்பொன் முத்துராமலிங்க தேவர் யார்?
இவர்களுக்கு எல்லாம் பெயர் என்ன? இவர்கள் எல்லாம் சமூக விரோதியா? அல்லது நகர்ப்புற நக்சல்களா? தலைவன் என்பவன் தன்னையே எரித்து உருக்கிக் கொள்பவனாக இருக்க வேண்டும். எதையும் இழக்கவே தயாராக இல்லாதவன் தலைவன் அல்ல.
இவ்வாறு சீமான் பேசினார்.