அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்து 3 மாதங்கள் ஓடிவிட்டது- தங்க தமிழ்ச்செல்வன்

Thanga Tamilselvan comments on AIADMK-BJP alliance

by Mathivanan, Feb 6, 2019, 11:49 AM IST

லோக்சபா தேர்தலுக்காக அதிமுக, பாஜக கட்சிகளிடையேயான கூட்டணி 3 மாதங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டுவிட்டது என தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

தேர்தலில் தோற்றுவிடுவோம் என தெரிந்தே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கிறது. இந்த கூட்டணி 3 மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டுவிட்டது.

தேசிய கட்சிகளுடன் அமமுக கூட்டணி அமைக்காது; மாநில கட்சிகளுடன் மட்டுமே நாங்கள் கூட்டணி வைப்போம்.

எங்களுக்கு அதிமுக ஒரு போட்டியே கிடையாது; திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டி. தேர்தலில் திமுகவை வீழ்த்துவோம்.

இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

 

You'r reading அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்து 3 மாதங்கள் ஓடிவிட்டது- தங்க தமிழ்ச்செல்வன் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை