திமுக கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லீம் லீக், கொங்கு நாடு கட்சிகளுக்கு தொகுதி உடன்பாடு ஏற்கனவே முடிந்து விட்டது. விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தொகுதி உடன்பாடு இழிபறியாக இருந்து வந்தது.
தேமுதிக கூட்டணிக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் திமுக தலைமையும் இந்தக் கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க முன் வந்ததே இதற்கு காரணம்.
தற்போது தேமுதிக கூட்டணிக்கு வராது என்பது நிச்சயமாகி விட்டதால், மீண்டும் இன்று இரண்டாவது கட்டமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது. எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படவில்லை என்றாலும் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.