சென்னை விமான நிலையத்தில், தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போர் பதற்றத்தை தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நடத்திய வழக்கமான சோதனையில், தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக, பாங்காக் செல்வதற்கு வந்திருந்த சபாபதி என்பவரை, காவல்துறை வசம் பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.