ஏகப்பட்ட பேரங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த பிரேமலதா, அதிமுக ஒப்புக்கொள்ளாததால் இழுத்துக்கொண்டே இருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட நிலையில், ஓடோடி வந்தனர்.
அதிமுக- தேமுதிக ஒப்பந்தம் கையெழுத்தானது. 4 சீட்டுகளை ஏற்றுக்கொண்டனர். இந்த சந்திப்பின்போது, மீண்டும் கேட்டுப்பார்ப்போமே என்கிற தொணியில் கூடுதல் சீட் கேட்டு வலியுறுத்தினார் பிரேமலதா.
அப்போது, "துவக்கத்திலிருந்தே எங்களுடன் நேரடி டச்சில் இருந்திருந்தீங்கன்னா, உங்க எதிர்பார்ப்பு நிறைவேறியிருக்கும். நீங்க, எங்களை மட்டமா நினைச்சி பி.ஜே.பி.யுடன் பேசினீங்க. எங்களோட கூட்டணி வேணாம்; பிஜேபியுடன் தான் கூட்டணிங்கிற மாதிரி.
அந்த பி.ஜே.பி.யையே 5 சீட்டுல முடிச்சோம். ஆரம்பத்திலிருந்தே பாமக எங்களோட ஆரோக்கியமா இருந்துச்சு என்று சொன்ன எடப்பாடி, " திமுக 20 சீட்டுல போட்டியிடுது. அதே அளவுக்கு நாங்களும் போட்டியிடணும். அப்பத்தான் எங்க கட்சி தொண்டர்கள் எங்கள மதிப்பாங்க.
அதுவுமில்லாம திமுகவுக்கு இணையா களத்துல இல்லைன்னா அதிமுக கூட்டணி வீக் என சொல்லுவாங்க. அதனால கூடுதல் சீட்டுக்கு வாய்ப்பில்லை " என மறுத்தார். அதன்பிறகு, ஒதுக்கப்பட்ட 4 இடங்களையும் பொதுத்தொகுதிகளாக வேண்டும் எனவும் கேட்டுள்ளார் சுதீஷ். வாய்ப்பில்லை.
தனித்தொகுதியையும் ஏற்க வேண்டும் என சொல்லியிருக்கிறார் எடப்பாடி. இருப்பினும், எங்கள் நிர்வாகிகளுடனும் மற்ற கட்சிகளுடனும் விவாதித்துவிட்டு வாய்ப்பிருப்பின் பரிசீலிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
கூட்டணி ஒப்பந்தம் முடிந்து பிரேமலதா, சுதீஷ் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கிளம்பி அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றனர். விஜயகாந்தோ அப்படியே நாற்காலியில் உட்கார்ந்தபடியே இருக்கிறார்.
அவரை அழைத்துச் செல்ல வேண்டும்ங்கிற சிந்தனை யாருக்குமே இல்லை. மறந்துவிட்டார் பிரேமலதா. இதை உணர்ந்த ஓபிஎஸ், தூரத்தில் சென்ற தேமுதிகவின் பார்த்தசாரதியை கூப்பிட்டு, " உங்க கட்சி தலைவரை விட்டுட்டு போறீங்களே ? " என்று சொல்ல, அவர் ஓடோடி வந்து, கேப்டனை அழைத்துச்சென்றார்.
அப்போது, "பார்த்து பத்திரமா அழைச்சிட்டுப் போங்க " என அட்வைஸ் செய்தார் எடப்பாடி.
எழில் பிரதீபன்