திமுக, அதிமுக கூட்டணியிலும் தொகுதிகள் ஒதுக்கீடு முடிவடைந்து விட்டது. இதனால் 39 தொகுதிகளிலும் எந்தெந்தக் கட்சிகளிடையே போட்டி என்பது தெளிவாகிவிட்டது. கூட்டணிக் கட்சிகளுக்கு இரு கட்சிகளுமே 19 தொகுதிகளை ஒதுக்தி விட்டு, திமுக 20 தொகுதிகளிலும், அதிமுக 20 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. திமுக சார்பில் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்தது. இந்த நேர்காணல் முடிந்து இன்று வேட்பாளார்கள் பட்டியலை வெளியிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். முன்னதாக வேட்பாளர் பட்டியலை அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றவர், கூடவே பொதுச்செயலாளர் க.அன்பழகனை சந்தித்தும் ஆசி வாங்கினார்.
அதன்பிறகு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், வேட்பாளர்கள் பெயரை அறிவித்தார். அதன்படி, ``கள்ளக்குறிச்சி - பொன்முடியின் மகன் கௌதமசிகாமணி; வேலூர் - துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்; நீலகிரி - ஆ.ராசா; தஞ்சாவூர்- S.S. பழனிமாணிக்கம்; கடலூர் - டி.ஆர்.ரமேஷ்; ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு; பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்; திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை; தூத்துக்குடி - கனிமொழி; மயிலாடுதுறை - ராமலிங்கம்; திருநெல்வேலி ஞானதிரவியம்; திண்டுக்கல் - வேலுச்சாமி; வடசென்னை - கலாநிதி வீராசாமி; தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்; மத்திய சென்னை - தயாநிதி மாறன்; அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்; தருமபுரி - எஸ். செந்தில்குமார்; காஞ்சிபுரம் - செல்வம்; சேலம் பார்த்திபன்; தென்காசி தனுஷ்குமார்" என்றார்.
இதேபோல் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள்: ``திருவாரூர் - பூண்டி கலைவாணன்; சாத்தூர் சீனிவாசன்; குடியாத்தம் - காத்தவராயன்; பெரம்பூர் - ஆர்.டி.சேகர்; தஞ்சை - டி.கே.ஜி. நீலமேகம்; பூந்தமல்லி - கிருஷ்ணசாமி; திருப்போரூர் - செந்தில்வர்மன்; ஆம்பூர் - விஸ்வநாதன்; அரூர் - கிருஷ்ணகுமார்; ஆண்டிப்பட்டி - மகாராஜன்; பரமக்குடி - சம்பத்குமார்; சோளிங்கர் - அசோகன்; ஓசூர் - சத்யா; மானாமதுரை - இலக்கியதாசன்" உள்ளிட்டோர் போட்டியிடவுள்ளனர்.